அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் - 625005, மதுரை .
Arulmigu Subramaniyaswamy Temple, Thirupparankundram - 625005, Madurai District [TM031985]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சங்கம் வளர்த்த மதுரையில் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில், அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயிலாகும். இத்திருத்தலத்தின் பெருமையைப் பற்றிச் சங்க கால நுால்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அகநானுறு, கலித்தொகை மற்றும் மதுரைக் காஞ்சி ஆகிய இலக்கியங்களில் பாடப் பெற்றுள்ளது. மேலும் சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியேராலும் பாடப்பெற்றுள்ளது. முற்காலப்பாண்டியமன்னர்கள் காலங்களில் குடைவரைக்கோயிலாகத் தோற்றம் பெற்ற இத்திருக்கோயில், பிற்காலப் பாண்டியமன்னர்கள் காலங்களில் மேலும் பொலிவுபெற்று, நாயக்கர் காலத்தில் அழகிய மண்டபங்களையுடைய கோபுரத்துடன் ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. தென்புறத்திலுள்ள குடைவரைக் கோயிலுக்கு அருகில் சமணர்களின் கற்படுக்கை அமைந்துள்ளது. பாண்டியர்கள் முதல், இடை, கடை என மூன்று தமிழ்ச்சங்க காலங்களிலும் ஆட்சி புரிந்துள்ளனர். சடையவர்மன் என்னும் பட்டம்...அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சங்கம் வளர்த்த மதுரையில் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில், அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயிலாகும். இத்திருத்தலத்தின் பெருமையைப் பற்றிச் சங்க கால நுால்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அகநானுறு, கலித்தொகை மற்றும் மதுரைக் காஞ்சி ஆகிய இலக்கியங்களில் பாடப் பெற்றுள்ளது. மேலும் சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியேராலும் பாடப்பெற்றுள்ளது. முற்காலப்பாண்டியமன்னர்கள் காலங்களில் குடைவரைக்கோயிலாகத் தோற்றம் பெற்ற இத்திருக்கோயில், பிற்காலப் பாண்டியமன்னர்கள் காலங்களில் மேலும் பொலிவுபெற்று, நாயக்கர் காலத்தில் அழகிய மண்டபங்களையுடைய கோபுரத்துடன் ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. தென்புறத்திலுள்ள குடைவரைக் கோயிலுக்கு அருகில் சமணர்களின் கற்படுக்கை அமைந்துள்ளது. பாண்டியர்கள் முதல், இடை, கடை என மூன்று தமிழ்ச்சங்க காலங்களிலும் ஆட்சி புரிந்துள்ளனர். சடையவர்மன் என்னும் பட்டம் பெற்று ஆட்சி புரிந்த நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி.765- 815) காலத்தியச்செப்பேடுகள் இலண்டன், பிரிட்டிஷ் பொருட்காட்சிச்சாலைகளிலும், சென்னை பொருட்காட்சி சாலையிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. திருப்பரங்குன்றம் கல்வெட்டுக்கள் இவனது ஆட்சிக்காலத்திற்குச் சான்று கூறுகின்றன. இவனுடைய தளபதிகளில் ஒருவனாகிய சாத்தன் கணபதி என்பான் திருப்பரங்குன்றத்தில் சிவபெருமானுக்குக் கோயில் எடுத்துள்ளார். அக்கோயிலே இன்று வழிபாட்டிலுள்ள திருப்பரங்குன்றத்துக் குடைவரைக்கோயிலாகும். நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இத்திருக்கோயிலுக்குப் பெரிய அளவில் நாயக்கர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். இராஜகோபுரத்தை வீரப்ப நாயக்கர் சக ஆண்டு 1505 ல் கட்டி முடித்துள்ளார். மேலும் இவர் கோயில் திருமதிலையும் கட்டி முடித்துள்ளார். திருமலை நாயக்கர் கி.பி. 1659 ல் முருகனை எப்போதும் தாம் வழிபட்டுக் கொண்டிருப்பது போன்று தம் உருவச்சிலையையும், தம் மனைவியர் இருவர் உருவச்சிலைகளையும் அமைத்துள்ளார். திருக்கல்யாணமண்டபம் என்னும் திருவாட்சி மண்டபமும், நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதேயாகும். ஆஸ்தான மண்டபத்தில் 48 தூண்களுடன் கூடிய அழகிய கண்கவரும் சிற்பங்களும் ராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
தல பெருமை
இத்திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆறுபடை வீடுகளில் முதற்படைவீடாகப் போற்றப்படுகிறது. பாண்டியநாட்டு 14 திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இத்திருத்தலம் ஒரு குடவரை கோவிலாகும். இத்திருத்தலத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் , ஸ்ரீ துர்க்கை அம்மன் , ஸ்ரீ பவளகனிவாய் பெருமாள், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆகிய ஐந்து தெய்வங்களும் ஒருங்கே அமைந்து அருள்பாலிக்கின்றனர். பொருள் பெற்ற ஒருவன் பொருள் இல்லாத வறியவனைக் கண்டு இன்னின்ன பெருமைகளை உடைய இன்னாரிடத்திலே சென்றால், வேண்டும் பொருள் அனைத்தும் பெறலாம் என்று ஆற்றுப்படுத்துவதை (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர். பொருளைப் பெறுவதைப் போல் அருளைப் பெறவும் நம் முன்னோர்கள் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்படையில் முருகன் உறையும் இடங்களாக ஆறு இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் திருப்பரங்குன்றம் முதன்மை...இத்திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆறுபடை வீடுகளில் முதற்படைவீடாகப் போற்றப்படுகிறது. பாண்டியநாட்டு 14 திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இத்திருத்தலம் ஒரு குடவரை கோவிலாகும். இத்திருத்தலத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் , ஸ்ரீ துர்க்கை அம்மன் , ஸ்ரீ பவளகனிவாய் பெருமாள், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆகிய ஐந்து தெய்வங்களும் ஒருங்கே அமைந்து அருள்பாலிக்கின்றனர். பொருள் பெற்ற ஒருவன் பொருள் இல்லாத வறியவனைக் கண்டு இன்னின்ன பெருமைகளை உடைய இன்னாரிடத்திலே சென்றால், வேண்டும் பொருள் அனைத்தும் பெறலாம் என்று ஆற்றுப்படுத்துவதை (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர். பொருளைப் பெறுவதைப் போல் அருளைப் பெறவும் நம் முன்னோர்கள் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்படையில் முருகன் உறையும் இடங்களாக ஆறு இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் திருப்பரங்குன்றம் முதன்மை வகிக்கிறது. இத்தலம் திருஞானசம்பந்தர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். இங்குள்ள ஸ்ரீ சத்தியகீரிஸ்வரர் , பராசரர், வேதவியாசர் ஆகிய மகிரிஷிகளால் பூஜிக்கப்பட்டவர். மூலஸ்தான கருவறையில் இறைவன் சத்தியகீரிஸ்வரர் கிழக்கு நோக்கியும், பவளகனிவாய் பெருமாள் , மகாலெட்சுமி தயாருடன் மேற்கு நோக்கியும், கற்பக விநயாகர் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் கையில் கரும்பும், மோதகத்துடனும் வடக்கு நோக்கியும், விஷ்ணு துர்க்கை சங்கு சக்கரத்துடன் மகிஷாசுரவர்த்தினியாக நின்ற கோலத்தில் வடக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். முருகப்பெருமான், சூரபதுமன் உடனான அசுரர்களை அழிக்க வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்களுடன் அண்டாபரணர், உக்கிரமூர்த்தி, ஆகிய சேனைகளுடன், சஷ்டி தினத்தன்று அருள்மிகு சக்தியின் திருக்கைவேல் பெற்று சூரபதுமனை வதம் செய்து ஆட்கொண்டு விண்ணவரை மீட்ட பின்பு முருகப்பெருமான் இத்தலத்தில் தெய்வானை அம்மையைத் திருமணம் புரிந்து திருமணக் கோலத்தில், அமர்ந்த நிலையில் கலியுக வரதனாய் அருள்பாலிப்பது மிகப்பெரும் சிறப்பம்சமாகும் முருகப்பெருமானின் திருமணத்தலம் என்பதால் அனைத்து மூர்த்திகளும் ஏகாந்தமாக (மகிழ்ச்சியுடன்) காட்சியளிப்பது எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். நக்கீரர் , சூரியன், சந்திரன், காயத்ரி, சாவித்ரி, சித்தவித்யாதரர், கலைமகள் நான்முகன், இந்திரன், மதங்கமாமுனிவர், குகமுனிவர், ஆகியோர் அருள்மிகு முருகப்பெருமான் - தெய்வானை அம்மனின் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம் அவர்கள் அனைவரின் திருஉருவங்களும், மூலஸ்தானத்தில் அமைந்திருப்பதால் மேற்படி தெய்வங்களை பக்தர்கள் வணங்கி அனைத்துத் தெய்வங்களின் அருளைப் பெற்றுச் செல்வது எங்கேயும், காணக்கிடைக்காத அரியகாட்சியாகும். இத்திருத்தலத்தில் அருள்மிகு சத்தியகீரிஸ்வரர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் எதிர் எதிரே காட்சி அளிப்பது சைவ வைணவ சமய ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது. லிங்க வடிவமாய் காட்சி அளிக்கும் இக்குன்றில் எழுந்தருளியுள்ள பரம்பொருளை, முருகப்பெருமான் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி தினத்தன்று நாள் முழுவதும் கிரிவலம் வந்து ஈசனின் அருள்பெற்றுச் செல்வது கண்கொள்ளாக்காட்சியாகும். அம்பாள் மகிஷனை வதம் செய்து பிரமகத்தி தோஷம் ஏற்பட்டதால் இத்தலத்தில் தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார் என்றும், இத்திருத்தல கற்பக விநாயகர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்தில் தரிசனம் செய்வதால் திருமணத் தடைகள் நீங்கி புத்திரப் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.இத்திருத்தலத்தில் தல விருட்சம்-கல்லத்தி மரம் ஆகும்