திருப்பரங்குன்றம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள அழகுமிக்க மலையின் அடிவாரத்தில், ஊரின் நடுவே குன்றே கோயிலாக எழுந்துள்ள எழில்மிகு திருக்கோயிலே அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் முறையாகப் பெற்ற வரலாற்றுப் புகழ் பெற்ற ஸ்தலமாகும். திருப்பரங்குன்றம் 275 தேவாரத் தலங்களில் ஒன்றாகப் பெருமை பெற்று உள்ளது. இத்திருக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1050 அடி உயரத்தில் உள்ளது. இத்தலம் திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரி, விட்டணுதுருவம். கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதற்படைவீடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. மூலவர் : சுப்பிரமணிய சுவாமி உற்சவர் : சுப்பிரமணிய சுவாமி அம்மன்/தாயார்...